உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வர் பிறந்தநாள் விழா; பள்ளிகளில் நலத்திட்ட உதவி

முதல்வர் பிறந்தநாள் விழா; பள்ளிகளில் நலத்திட்ட உதவி

புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, திருபுவனை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளில் என்.ஆர்.காங்., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு திருபுவனை தொகுதியில், முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தால் குப்பம், கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி, திருபுவனை பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.அந்த பள்ளிகளில் பயிலும், 1,200 மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் துணை சேர்மன் சுகுமாரன், குழும செயலாளர் நாராயணசாமி கேசவன், என்.ஆர். காங்., இலக்கியப் பேரவை தலைவர் தனசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.விழாவில் என்.ஆர்.காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி