மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
புதுச்சேரி: சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தலைமை செயலர் விருது வழங்க போலீஸ் தலைமையகம் ரெடியாகி வருகிறது.புதுச்சேரி காவல் துறையில் சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமை செயலர் விருது வழங்கும் திட்டம் கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது.இந்தாண்டிற்கான சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களை தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளை போலீஸ் தலைமையகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. வடக்கு, தெற்கு,மேற்கு,கிழக்கு, காரைக்கால் பிராந்தியங்களில் இருந்து தலா இரண்டு போலீஸ் ஸ்டேஷன்களும், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் இருந்து தலா ஒரு போலீஸ் ஸ்டேஷன்கள் விருதிற்காக பரிந்துரை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.போலீஸ் ஸ்டேஷன்களில் நடந்த குற்றங்கள், அவற்றில் கண்டு விகிதம், சட்ட ஒழுங்கு பேணுதல், முன்கூட்டியே குற்றங்களை தடுத்தல், போலீஸ் ஸ்டேஷன் ஆவணங்களை பராமரித்தல், காவல் நிலைய துாய்மை, மனித உரிமை பாதுகாத்தல், பொதுமக்கள்-போலீஸ் நல்லுறவு, நவீனமயமாக்குதல் உள்பட 11 அளவீடுகள் அடிப்படையில் சிறந்த போலீஸ் ஸ்டேஷன் தேர்ந்தெடுக்கப்படும்.இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டியினர் பரிந்துரைக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷனை பார்வையிட்டு அனைத்து அளவீடுகளையும் மதிப்பீடுவர். இக்கமிட்டியின் ஆய்வறிக்கை டி.ஐ.ஜி., வழியாக உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிறந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு தலைமை செயலர் சுழற்கோப்பை வழங்கப்படும். ஏற்கனவே சிறந்த போலீஸ் ஸ்டேஷன் விருது பெற்ற காவல் நிலையங்கள் மூன்று ஆண்டுகளுக்கு பிறகே விருதிற்கு பரிந்துரைக்க முடியும்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago