| ADDED : மே 15, 2024 01:11 AM
புதுச்சேரி, : உழந்தை ஏரி உபரி நீர் செல்லும் வாய்க்கால் கட்டுமான பணியை விரைந்து முடிக்க, அசோக் பாபு எம்.எல்.ஏ., அறிவுறுத்தி உள்ளார்.முதலியார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட, உழந்தை ஏரி உபரி நீர் செல்லும் வாய்க்கால் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த வாய்க்காலில் கழிவு நீர் தேங்கி, அருகிலுள்ள ஜான் பால் நகர், ஜான் பால் நகர் விரிவு, காயத்ரி நகர், புதிய பைபாசை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள், அசோக் பாபு எம்.எல்.ஏ.,விடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் கால்வாய் கட்டுமான பணியை பார்வையிட்டார். ஒப்பந்ததாரரை அழைத்து கட்டுமான பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.