உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அமைச்சருடன் முதல்வர் சந்திப்பு

மத்திய அமைச்சருடன் முதல்வர் சந்திப்பு

  புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்த மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியை முதல்வர் ரங்கசாமி நேற்று சந்தித்தார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். உப்பளம் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த மத்திய அமைச்சரை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மரியாதை நிமித்தமாக சந்திதார். அப்போது நினைவு பரிசை வழங்கிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி நிலவரம் குறித்து மத்திய அமைச்சரிடம் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ