உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / படகு குழாமில் ரூ.11 லட்சம் வசூல்

படகு குழாமில் ரூ.11 லட்சம் வசூல்

அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் படகு குழாமில், இரண்டு நாட்களில் 11 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. கடலுார் சாலை, நோணாங்குப்பத்தில் படகு குழாம் உள்ளது. புதுச்சேரிக்கு வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர். வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் படகு குழாமில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதும். விடுமுறை நாட்களான நேற்று முன்தினம் மற்றும் நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்தனர். இரண்டு நாட்களில் 11 லட்சம் ரூபாய் சுற்றுலாத்துறைக்கு வருவாய் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி