மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
3 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
3 hour(s) ago
புதுச்சேரி: பாரதிதாசன் கல்லுாரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளின் கேள்விகளுக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பதில் அளித்தார்.புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் அரசு கலை கல்லுாரியில், தேர்தல் துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பதிலளித்து கூறுகையில், 'நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த போதிய அளவில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. நாடு முழுதும் 90 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் நடத்த 1.5 கோடி ஊழியர்கள் உள்ளனர்.இந்த அளவுக்கு அதிக வாக்காளர்கள் கொண்ட தேர்தல் உலகில் வேறு எங்கும் நடப்பது இல்லை. தேர்தல் நடத்த பாதுகாப்பு பணிக்கு போலீஸ், துணை ராணுவம் தேவை. அதனால் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதுபோல் ஒரு மாநிலத்தில் தேர்தல் முடித்தவுடன் ஓட்டு எண்ணி முடிவை அறிவித்தால், அந்த முடிவு மற்ற மாநிலத்தில் ஓட்டு அளிக்க உள்ள வாக்காளர்களின் மனநிலையை மாற்றி விடும். அதனால் 7 கட்டமாக தேர்தல் நடந்தாலும், ஒட்டு எண்ணிக்கை ஒரே கட்டமாக நடக்கிறது' என்றார்.அதுபோல், பசுமை தேர்தல் ஓட்டுச்சாவடி மூலம் ஒரு நபர் நடந்து சென்று ஓட்டு அளிப்பதால் என்ன மாற்றம் வர போகிறது என கேள்வி எழுப்பட்டது. அதற்கு, சிறு துளி பெரு வெள்ளம். சிறிய கூட்டு முயற்சி என கூறினார்.
3 hour(s) ago
3 hour(s) ago