உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அதிகாரிகள் மீது நடவடிக்கை இந்திய கம்யூ., வலியுறுத்தல்

அதிகாரிகள் மீது நடவடிக்கை இந்திய கம்யூ., வலியுறுத்தல்

புதுச்சேரி : விஷவாயு தாக்கிய விவகாரத்தில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூ., வலியுறுத்தி உள்ளது.அக்கட்சியின் செயலாளர் ராஜாங்கம் அறிக்கை: பாதாள சாக்கடையில் அடைப்புகள் ஏற்படாமல் முழுமையாக கண்காணித்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யாததன் விளைவாக, மூவர் இறந்துள்ளனர். அலட்சியமாக செயல்பட்ட அரசு ஊழியர்கள், அதிகாரிகள் முதல் துறை அமைச்சர் வரை அனைவர் மீதும் வழக்கு பதிய வேண்டும்.இறந்தவர்களின் குடும்பகளுக்கு தலா, ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். அந்த பகுதி முழுதும் மக்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை நடத்திட வேண்டும்.சம்பவத்தின் உண்மை தன்மையை அறிய விசாரணைக்குழு அமைத்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ