உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா துவக்கம்

வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா துவக்கம்

வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் 20ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் சிவா எம்.எல்.ஏ., வில்லியனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் விழாவில் காலையில் சிறப்பு திருமஞ்சனம், மாலையில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக வரும் 17ம் தேதி மாலை கருடசேவை நிகழ்ச்சி, 18ம் தேதி யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா, 19ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 21ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. விழாவில் முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,கள் பங்கேற்று, தேர் வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். 24ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 25ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சந்தானராமன் மற்றும் உற்சவதாரர்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ