மேலும் செய்திகள்
சாலை ஆக்கிரமிப்பு
05-Jul-2026
குப்பை வண்டி வருமா?: காமராஜர் நகர் தொகுதி, சங்கரதாஸ் சுவாமிகள் நகரில் குப்பை வண்டி சரிவர வராததால் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. சிவமூர்த்தி, புதுச்சேரி. நாய்கள் தொல்லை: தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். லட்சுமி, தட்டாஞ்சாவடி. ஆக்கிரமிப்பால் நெரிசல்: நயினார்மண்டம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாறன், புதுச்சேரி. போக்குவரத்து நெரிசல்: மரப்பாலம் சந்திப்பில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ரமேஷ், மரப்பாலம். குண்டும் குழியுமான சாலை: மூலக்குளம் – மேட்டுப்பாளையம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். பரணி, மூலக்குளம்.
05-Jul-2026