| ADDED : ஜூன் 02, 2024 05:04 AM
புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி பொதுப் பணித்துறையில் கண்காணிப்பு பொறியாளராக பணி செய்த பாஸ்கர் ஓய்வு பெற்றார். அவருக்கு, பொதுப்பணித்துறை சார்பில், பாராட்டு விழா, தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். இந்நிகழ்வில் கண்காணிப்பு பொறியாளரின் பணிகள் குறித்து பொறியாளர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டு, அவருக்கு நினைவுப்பரிசை வழங்கினார். கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர் ஏற்புரை வழங்கினார். கண்காணிப்பு பொறியாளர் வீர செல்வம், செயற்பொறியாளர்கள் சுந்தரமூர்த்தி, கஜலட்சுமி, சுப்பராயன், வாசு, சந்திரகுமார், சுந்தர்ராஜ், உமாபதி, ராஜகிருஷ்ணன், சிறப்பு அலுவலர் பால சவுந்தரி, கண்காணிப்பாளர் அசோக், சட்ட அலுவலர் லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.