உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி : புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்புத்துறை நகர அமைப்பாளர் விஜயநேருவிற்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி நகரம் மற்றும் கிராம அமைப்புத்துறை நகர அமைப்பாளர் விஜயநேரு. இவர் கடந்த, 1989ல் இருந்து இந்த துறையில் பணியில் சேர்ந்தார். நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்தவர். கடந்த, 2002-2005ம் ஆண்டு வரை, காரைக்கால் நகர அமைப்புக்குழும உறுப்பினர் செயலராக பணியாற்றினார்.கடந்த, 2013-2018ம் ஆண்டு காலகட்டத்தில், புதுச்சேரி நகர அமைப்பு குழும உறுப்பினராக பணிபுரிந்தார். அவர், 35 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, சர்தார் படேல் சாலையில் உள்ள அதிதி ேஹாட்டலில், பாராட்டு விழா நடந்தது.விழாவில், சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க் கள் ரமேஷ், நேரு, ஆறுமுகம், ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று, அவரை பாராட்டினர். அதுமட்டுமின்றி, விழாவில் முக்கிய அரசியல் கட்சியினர், பல்துறை பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ