உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

புதுச்சேரி : ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையல் பணியாளர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையல் பணியாளர்களாக, வில்லியனுார் மாணவர்கள் விடுதியில் பணி புரிந்த மகேஸ்வரன் மற்றும் மதகடிப்பட்டு விடுதியை சேர்ந்த திருநாவுக்கரசுவிற்கும் பாராட்டு விழா நடந்தது. விழாவில், துறை இயக்குனர் இளங்கோவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இருவரது சேவையையும் பாராட்டி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், உதவியாளர் ஆனந்த்ராஜ், அதிகாரிகள் மோகனா, வித்யா வதி, பாரி, சதீஷ், மற்றும் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை