உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க முப்பெரும் விழா

நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க முப்பெரும் விழா

புதுச்சேரி: அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில், முப்பெரும் விழா நடந்தது.புதுச்சேரி மாநில கிளை 2ம் ஆண்டு துவக்க விழா, மக்கள் மருந்தகம் ஜெனரிக் மெடிசன் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கண்காட்சி ஆகிய முப்பெரும் விழா, நவீனா கார்டன் திருமண மண்டபத்தில் நடந்தது.நுகர்வோர் கண்காட்சியை மனநல மருத்துவர் வெங்கடரங்கன் திறந்து வைத்தார்.இவ்விழாவில், பாலாஜி முருகன் தலைமை தாங்கினார். வக்கீல் ஐயப்பன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், துவக்க உரை நிகழ்த்தினார். இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யநாராயணன் நுகர்வோருக்கான விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார். மருத்துவர் சங்கர், மக்கள் மருந்தகம் குறித்து பேசினார்.நிகழ்ச்சியில், அர்ஜுன கிருஷ்ணா ராம், பிரதாபன், சிவதிவ்யா, பன்னீர்செல்வம், இயக்கத்தின் பொருப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை