மேலும் செய்திகள்
டெபாசிட் தொகை கேட்டு அலையும் ஒப்பந்ததாரர்கள்
27-Aug-2024
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் பொதுப்பணித்துறையில் ரூ. 20 கோடி வரையிலான பணிகளை தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இனி மேற்கொள்ளலாம்.புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையின் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கு, 2024 - 25ம் ஆண்டுக்கான புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாகி பகுதிகளுக்கான தனித்தனி புதிய விலைப்பட்டியல் அடங்கிய புத்தகத்தை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் வெளியிட்டார் .இதேபோல் பொதுப்பணித்துறையில் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கான ஒப்பந்தத் திறன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட அரசாணையினை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.இதன்மூலம் புதுச்சேரி ஒப்பந்ததாரர்கள் பொதுப்பணித் துறையில் 20 கோடி ரூபாய் வரையிலான பணிகளை தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் ஏலத்தில் கலந்துகொண்டு மேற்கொள்ளலாம்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், துறை செயலர் ஜெயந்தகுமார் ரே, தலைமைப் பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.
27-Aug-2024