உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேர்தல் பாதுகாப்பு பணி முடிந்து திரும்பிய சி.ஆர்.பி.எப்.வீரர்கள் 

தேர்தல் பாதுகாப்பு பணி முடிந்து திரும்பிய சி.ஆர்.பி.எப்.வீரர்கள் 

புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட சி.ஆர்.பி.எப்., வீரர்கள் நேற்று ரயில் மூலம் செகந்திராபாத்திற்கு புறப்பட்டு சென்றனர்.நாடு முழுதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஏப். 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இதற்காக மத்திய துணை ராணுவ படையினர் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் புதுச்சேரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சட்டம் ஒழுங்கு போலீசாருடன் இணைந்து ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு, ஓட்டுச்சாவடி பாதுகாப்பு உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். ஒரு கம்பெனிக்கு 100 பேர் வீதம், 10 கம்பெனி சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 8 கம்பெனி புதுச்சேரியிலும், 1 கம்பெனி காரைக்கால், 1 கம்பெனி ஏனாம், மாகியில் பணியில் இருந்தனர்.ஓட்டுப்பதிவு முடிந்த பின்பு, 8 கம்பெனி வீரர்கள் மற்ற மாநில ஓட்டுப்பதிவு பாதுகாப்புக்கு சென்றனர். மீதம் 2 கம்பெனி வீரர்கள் மட்டும் ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் முடிவு அறிவிப்பு வெளியான பின்பு, தேர்தல் நடத்தை விதிகளும் வாபஸ் பெறப்பட்டது.இதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 கம்பெனி சி.ஆர்.பி.எப்., வீரர்கள் நேற்று ரயில் மூலம் புறப்பட்டு சென்றனர். புதுச்சேரியில் இருந்து கச்சிக்கூடா எக்ஸ்பிரஸ் ரயிலில் ைஹதாரபாத்திற்கு சென்று அங்கிருந்து செகந்திராபாத்திற்கு செல்ல உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை