மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
12 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
12 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
12 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
12 hour(s) ago
திருக்கனுார் : கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, பி.எஸ்.பாளையம், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் நெல், கரும்பு, மரவள்ளி கிழங்கு, மணிலா ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்து வரும் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.இதையடுத்து, காட்டு பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்க விவசாயிகள், இரவு நேரங்களில் ஒலி பெருக்கிகள் மூலம் பல்வேறு குரலில் சத்தம் எழுப்பியும், வெடிகள் வெடித்தும் வருகின்றனர். இருப்பினும், காட்டுபன்றிகள் இரவு நேரங்களில் கூட்டமாக வந்து, விவசாய பயிர்களை மிதித்து சேதப்படுத்தி விட்டு செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.இதனால், விவசாயிகள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். எனவே, காட்டுபன்றிகளை விரட்டவும், வனவிலங்குகள் மூலம் சேதப்படுத்தப்படும் விவசாய நிலங்களை, அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago