உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாதன பொருட்கள் மின்னல் தாக்கி சேதம்

மின்சாதன பொருட்கள் மின்னல் தாக்கி சேதம்

திருக்கனுார் : வம்புப்பட்டில் கனமழையின் போது தென்னை மரத்தில் இடி தாக்கியதில், அப்பகுதி வீடுகளில் இருந்த 50க்கும் மேற்பட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன.திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.இதற்கிடையே வம்புப்பட்டு கிராமத்தின் மத்தியில் இருந்த தென்னை மரம் ஒன்றின் மீது மின் தாக்கி முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதன் காரணமாக அருகில் இருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளில் திடீர் உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு பயன்பாட்டில் இருந்த ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பேன், டிவி., உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !