உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ம.க.,வினருக்கு கறி விருந்து தங்கர்பச்சான் அசத்தல்

பா.ம.க.,வினருக்கு கறி விருந்து தங்கர்பச்சான் அசத்தல்

வடலுார் : கடலுார் தொகுதியில் தேர்தல் பணியாற்றிய பா.ம.க., தொண்டர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டதுதமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடலுார் தொகுதியில் பா.ம.க., சார்பில் போட்டியிட்ட திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிட்டார். இவர், பா.ம.க., தொண்டர்களுடன் கடும் வெயிலில் கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்து, மக்களின் கவனத்தை ஈர்த்தார்.இந்நிலையில், குறிஞ்சிப்பாடியில் பா.ம.க., சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நேற்று திருமண மண்டபம் ஒன்றில் கூட்டம் நடந்தது. அதில் தங்கர்பச்சான், தேர்தலில் பணியாற்றிய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.தொடர்ந்து தொண்டர்களுக்கு மட்டன் பிரியாணி, சாப்பாடு, சிக்கன் 65, சாம்பார், ரசம், பாயசத்துடன் பரிமாறியதோடு, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். இந்த கறி விருந்து பா.ம.க., தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விருந்தில் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், கார்த்திகேயன், கடலூர் லோக்சபா தொகுதி பொறுப்பாளர் ஆலயமணி, மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, மாணவரணி தலைவர் கோபிநாத், முன்னாள் மாநில துணை செயலாளர் தர்மலிங்கம், நகர செயலாளர் நடராஜ், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், சகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ