உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணக்குள விநாயகர் கோவிலில் கவர்னர் குடும்பத்துடன் தரிசனம்

மணக்குள விநாயகர் கோவிலில் கவர்னர் குடும்பத்துடன் தரிசனம்

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்றார். அவர் நேற்று காலை 11 மணிக்கு, மணக்குள விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் 9ம் ஆண்டு கும்பாபிேஷக விழா ஏகதின லட்சார்ச்சனையில் பங்கேற்க சென்றார். அங்கு அவருக்கு, கோவில் நிர்வாக அதிகாரி பழனியப்பன் மற்றும் ஆலய அர்ச்சகர்கள், பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.பின்னர் அவர் கோவிலில் நடைபெற்றசிறப்பு பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார். கவர்னருடன், அவரது குடும்பத்தினரும் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி