உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பிக்க 8ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பிக்க 8ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு

புதுச்சேரி : எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 8ம் தேதி வரை காலக்கெடுவை சென்டாக் நீட்டித்துள்ளது.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.,(பல் மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ்.,(ஆயுர்வேதம்), கால்நடை மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு கடந்த 28ம் தேதி முதல் www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் ஆன் லைனில் விண்ணப்பம் வரவேற்றுள்ளது. இன்று 6ம் தேதி வரை விண்ணப்பிக்க சென்டாக் இறுதி காலக்கெடு அளித்திருந்தது. இருப்பினும் 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருவாய் சான்றிதழை சமர்பிக்கவில்லை. இம்மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக வரும் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் விண்ணப்பிக்க காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

விண்ணப்ப கட்டணம்

அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை விண்ணப்ப கட்டணமாக, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுதிறனாளி பிரிவினருக்கு, ரூ.500, இதர பிரிவினருக்கு ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்வாக இடங்கள், சுய நிதி இடங்களை பொருத்தவரை எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுதிறனாளி பிரிவினருக்கு ரூ.1000, இதர பிரிவினர், பிற மாநில மாணவர்களுக்கு ரூ.2,000, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை சம்பந்தமான சந்தேகங்களுக்கு dhtepdy.edu.inஎன்ற இ-மெயில் முகவரியிலும் 0413-2655570,2655571 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சென்டாக் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை