உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சதுப்பு நிலங்களை கணக்கெடுக்க முடிவு

சதுப்பு நிலங்களை கணக்கெடுக்க முடிவு

முதல்வரின் பட்ஜெட் உரையில் வனம் மற்றும் வன விலங்கு குறித்த முக்கிய அறிவிப்புகள்வனம் மற்றும் வனம் அல்லாத பகுதிகளில் மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு, தொழில்துறை நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், பொதுமக்களுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும்.கடல் ஆமைகள் பாதுகாக்க இயற்கையான குஞ்சு பொறித்தல் முறையை பயன்படுத்தி கடல் ஆமை முட்டைகளை குஞ்சு பொறிக்க வைத்து மீண்டும் கடலில் விடப்படும். மத்திய அரசின் சதுப்பு நிலக்காடுகள், கடற்கரை வாழ்விடங்கள் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சதுப்பு நில பகுதிகளை கணக்கெடுத்து, சதுப்பு நிலக்காடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ