உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரசார கூட்டத்திற்கு ஆள் சேர்க்க மகளிர் சுய உதவி குழுவினருக்கு டிமான்ட்

பிரசார கூட்டத்திற்கு ஆள் சேர்க்க மகளிர் சுய உதவி குழுவினருக்கு டிமான்ட்

புதுச்சேரி : வெயில் காரணமாக பகல் நேரத்தில் நடக்கும் தலைவர்கள் பிரசார கூட்டங்களில் பங்கேற்க மகளிர் சுய உதவி குழுவினர் தயக்கம் காட்டுவதால், அரசியல் கட்சியினர் மன்றாடி வருகின்றனர்.புதுச்சேரியில் காங்., மற்றும் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி வேட்பாளர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இருவரும் கடந்த 3 நாட்களாக தேர்தல் பிரசாரத்தை துவக்கி நடத்தி வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தின்போது, ஆட்கள் சேர்க்க அந்தந்த கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் உதவியை கட்சிகள் நாடி வருகின்றன.தலைவர்கள் பேசும் ஒரு இடத்தில் கும்பலாக நிற்பதிற்கு ரூ. 200, இரண்டாவது ஸ்பாட்டில் நின்றால் ரூ. 200 என ஒரு நாளைக்கு 3 ஸ்பார்ட்டில் கூட்டத்தில் நிற்க ரூ. 600 பேசுகின்றனர். கூட்டத்திற்கு அழைத்து செல்லும் ஏஜென்டிற்கு ஒரு தலைக்கு ரூ. 100 கமிஷன் போக, மீதம் ரூ. 500 வழங்குகின்றனர். தற்போது வெயில் கடுமையாக உள்ளதால், ரூ. 500 கொடுத்தாலும் காலையில் நடக்கும் பிரசார கூட்டங்களில் பங்கேற்ற ஆர்வம் காட்டுவதில்லை. வெயில் குறைந்த பின்பு மாலை நேரத்தில் நடக்கும் பிரசாரத்தில் கலந்து கொள்ள விரும்புகின்றனர்.இதனால் பகல் நேர பிரசார கூட்டத்தில் மக்களை அழைத்து வர அரசியல் கட்சி பிரமுகர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் மன்றாடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ