உள்ளூர் செய்திகள்

பிரிவு உபசார விழா

புதுச்சேரி: பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு மற்றும் பிரிவு உபசார விழா நடந்தது.பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி 2024-25ம் கல்வி ஆண்டிற்கு பள்ளி துணை முதல்வராக சின்னப்பன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவரை பள்ளி முதல்வர் தேவதாஸ் வரவேற்று பேசினார். இருதய ஆண்டவர் பசிலிகாவின் அதிபர் பிச்சை முத்து, அறிமுக உரையாற்றினார். விழாவில், பணி ஓய்வு பெற்ற, சமூக அறிவியல் துறையின் தலைவர் ஆசிரியர் ஜேவியர், அலுவலக மேலாளர் ஜாகப் ஆகியோருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. பள்ளியின் முதல்வர் தேவதாஸ் இருவரையும் பாராட்டி பணிக்கொடை வழங்கினார். ஆசிரியர் ஜேவியர் என்.சி.சி., விமானப்படை பயிற்சி அதிகாரியாகவும் சிறப்பாக பணியாற்றியவர். மேலும், மாநிலம் மற்றும் தேசிய அளவில் விருதுகள் பெற்றவர், 45 முறை ரத்த தானம் வழங்கியவர்.நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் எட்வின், புஷ்பராஜ், ரெக்ஸ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஆசிரியர் ரெக்ஸ் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை