மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில், கழிவு நீர் பிரச்னையால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக, தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:உருளையன்பேட்டை சுப்பையா நகரில் 6 மற்றும் 7 வது குறுக்கு தெருக்களில் உள்ள கழிவுநீர் தொட்டி குழாய், மறைமலை அடிகள் சாலையில் உள்ள, பிரதான சாலை கழிவுநீர் தொட்டியில் விழுமாறு அமைக்கப்பட்டிருந்தது. அந்த வீதியில் பக்கவாட்டு வாய்க்கால் அமைக்கும் போது, கழிவு நீர் குழாய் உடைக்கப்பட்டு கழிவுநீர் தொட்டிக்கு செல்லாமல், மறைமலை அடிகள் சாலையில் உள்ள பெரிய வாய்க்காலில் நேரடியாக விழுகிறது. இதனால் துர்நாற்றமும், கொசுத் தொல்லையும் அதிகரித்து, டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பரவும் நிலை உருவாகி உள்ளது.அதேபோல், இதேபோல சுப்பையா நகர், 4வது குறுக்குத் தெருவில் உள்ள கழிவுநீர் தொட்டிகளில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் வழிந்து ஓடுகிறது. மேலும், அய்யனார் நகரில் அமைந்துள்ள கழிவுநீர் பாதை சீராக அமைய பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago