உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுப்பணித்துறையை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

பொதுப்பணித்துறையை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: நெல்லித்தோப்பு பகுதியில், பொதுப்பணித்துறையை கண்டித்து, தி.மு.க., வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லித்தோப்பு லெனின் வீதியில் பொதுப்பணித்துறை மூலம் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள், ஆமை வேகத்தில் நடப்பதாக, தி.மு.க., குற்றம்சாட்டி உள்ளது. இந்த நிலையில், இந்த பணிகளை, துரிதமாக முடித்துக் கொடுக்கக் கோரி, குயவர்பாளையம், லெனின் வீதி, காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன் முன்னிலை வகித்தனர்.அவைத்தலைவர் பானு கணேசன், நிர்வாகிகள் அண்ணா அடைக்கலம், சந்திரேஷ்குமார், கண்ணன், கருணாகரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், அமுதா குமார், நர்கீஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி