புதுச்சேரி : நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி காரணமாக வரும் 3, 5, 6 ஆகிய தேதிகளில் குடிநீர் வினியோகம் தடைப்படும் என, பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.பொதுப்பணித் துறையின் பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் செய்திக் குறிப்பு:புதுச்சேரி வி.வி.பி., நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள இருப்பதால் வரும் 3ம் தேதி மதியம் 12:00 முதல் 2:00 மணி வரையில் வி.வி.பி.,நகர், பேட்டையான்சத்திரம், காந்தி நகர், ஞாயதியாகு நகர், கஸ்துாரிபாய் நகர், வீமன், திலாசுபேட்டை, கதிர்காமம், திண்டிவனம் ரோட்டில் முருகா தியேட்டர் முதல் வீமன் நகர் பஸ்டாண்ட் வரை, வழுதாவூர் ரோட்டில் முருகா தியேட்டர் சிக்னல் கதிர்காமம் பஸ்டாண்ட் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைப்படும். தந்தை பெரியார் நகர்
இதேபோல் புதுச்சேரி தந்தை பெரியார் நகர் கீழ்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி பராமரிப்பு பணி வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் நடக்க உள்ளது. எனவே இந்த இரு நாட்களில் தந்தைபெரியார் நகர், கோல்டன் அவன்யு, சாரதாம்பாள் நகர், மணக்குள விநாயகர் நகர், எஸ்.பி.ஐ., காலனி, ரத்னா நகர், அம்பாளர் நகர், குண்டுபாளையம், கவுண்டன்பாளையம், மருதம் நகர்,ஆரூத்ரா நகர், மூகாம்பிகை நகர், அஜீஸ் நகர் பவழ நகர், எல்லைப்பிள்ளைச்சாவடி, திலகர் நகர், விவேகானந்தா நகர், வழுதாவூர் ரோடு, கணபதி நகர், சித்தானந்தா நகர், மோகன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடி நீர் வினியோகம் தடைப்படும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.