உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வயல்வெளி நகர் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

வயல்வெளி நகர் பகுதியில் 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

புதுச்சேரி : வயல்வெளி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. புதுச்சேரி, வயல்வெளி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதனால், வரும் 23 மற்றும் 24ம் தேதி ஆகிய இரு நாட்களில், ஜெ.ஜெ., நகர், என்.எஸ்.சி., போஸ் நகர், தென்றல் நகர், யோகலட்சுமி நகர், இன்ஜினியர்ஸ் காலனி, சரஸ்வதி நகர், அன்னைதெரேசா நகர், மூலக்குளம், உழவர்கரை, வயல்வெளி, கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், சிவகாமி நகர், வள்ளலார் நகர் ஆகிய பகுதிகளில், மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை