உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்துறை எச்சரிக்கை

மின்துறை எச்சரிக்கை

புதுச்சேரி : மின் கட்டண நிலுவை தொகை செலுத்தாதவர்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என, மின்துறை எச்சரித்துள்ளது.மின்துறை தெற்கு கோட்டம் (கிராமம்) செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மின்துறை தீவிர மின் துண்டிப்பு மேற்கொள்ள இருப்பதால், தெற்கு கிராம கோட்டம் அலுவலகத்திற்குட்பட்ட அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், வடமங்கலம், திருவண்டார்கோவில், வாதானுார், கரியமாணிக்கம், கரையாம்புத்துார் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர், தங்களுடைய நிலுவை தொகை மற்றும் மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும். இல்லையெனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இணைப்பு துண்டித்த பிறகு, நிலுவை தொகை முழுவதும் செலுத்தியபிறகே மின் இணைப்பு வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sivaprakash P
ஏப் 28, 2024 12:44

அதெல்லாம் சரி சரியாக கட்டணம் செலுத்துபவர்களுக்கு தரமான மின்சாரம் அளிக்கிறார்களா? கோடை காலத்தில் வீட்டு நுகர்வு மின்சாரம் வோல்ட் வரை சரிகிறது நிரந்தர சேவை வரி மட்டும் வசூலிப்பது ஏன்?