உள்ளூர் செய்திகள்

அமுத படையல் விழா

நெட்டப்பாக்கம், : கல்மண்டபம் கிராமத்தில் 81ம் ஆண்டு சிறுத்தொண்ட நாயனார் திருஅமுத படையல் விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை 4.30 மணிககு திருமுறை வீதி உற்சவம், 5.00 மணிக்கு சிவலிங்க திருமேணிக்கு அபி ேஷகம், சிவனடியார்களின் சிவ பூசை வழிபாடும், 6.30 மணிக்கு பேரொளி வழிபாடு, திருநீற்று பிரசாதம், இரவு 9.00மணிக்கு திருவிளையாடல் புராணம் நடந்தது. இன்று காலை 8.30 மணிக்கு சிறுதொண்ட நாயனார் மனைவியிடம் ஆலோசனை கேட்டல், 11 மணிக்கு சீராளனை அழைத்தல், மதியம் 12.00 மணிக்கு திருஅமுது படையல் படைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், இரவு 9.00 மணிக்கு திருவிளையாடல் புராணம் நடக்கிறது.ஏற்பாடுகளை கல்மண்டபம் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை