உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் முதல் நாள் சஸ்பெண்ட்: மறுநாள் ரத்து

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் முதல் நாள் சஸ்பெண்ட்: மறுநாள் ரத்து

'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவு நேற்று ரத்து செய்யப்பட்டது.திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாக இருந்தவர் வெள்ளத்துரை. 'என்கவுன்டர் ஸ்பெஷலிட்' ஆன இவர் சந்தன கடத்தல் வீரப்பன் உட்பட, 12 பேரை, 'என்கவுண்டர்' முறையில் சுட்டுக்கொன்றுள்ளார்.இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ரவுடி கொக்கிகுமார், வெள்ளத்துரை தாக்கியதால் போலீஸ் விசாரணையில் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்த சி.பி.சி.ஐ.டி., வழக்கு நிலுவையில் உள்ளதால்,நேற்றுஓய்வு பெற இருந்த வெள்ளத்துரை நேற்று முன்தினம் இரவு சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலர் அமுதா உத்தரவிட்டார். இந்த உத்தரவை நேற்று இரவு வாபஸ் பெற்றார்.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஓய்வு பெற்ற வெள்ளத்துரையிடம் இருந்து 2 வழக்குகளிலில் ரூ.5 லட்சம் பிடித்தம் செய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை