உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொறியியல் கல்லுாரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பொறியியல் கல்லுாரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை வளாகத்தில், பல்வேறு கோரிக்கை களை, வலியுறுத்தி பொறியியல் கல்லுாரி ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை வளாகத்தில், பொறியில் கல்லுாரி ஆசிரியர்களின், உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதில், பொறியியல் கல்லுாரியாக இருந்த பல்கலையில் கடந்த, 2007,ம் ஆண்டிற்கு பிறகு ஒரு முறை கூட, ஆசிரியர் பதவிக்கான நேர்காணல்கள் நடத்தப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும், பணி மூப்பால் ஓய்வு பெறும் ஆசிரியர்களால் ஏற்பட்டுள்ள 70 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள், உடனே முறைப்படி, நியமிக்க, புதுச்சேரி அரசின் உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், அனைத்து துறைகளையும் சேர்த்து, 250,க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத தொழில்நுட்ப பணியிடங்கள் மற்றும் அலுவலக ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பல ஆண்டுகளாக ஆய்வுக்கூட பயிற்சி பெறுவதில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. எனவே உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள், போராட்டத்தில் முன் வைக்கப்பட்டன.இதில், சங்கத் தலைவர் இளஞ்சேரலாதன், செயலாளர் கல்பனா, சங்க நிர்வாகிகள், பொறியில் கல்லுாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை