உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாஜி ராணுவ வீரரின் மனைவி தற்கொலை

மாஜி ராணுவ வீரரின் மனைவி தற்கொலை

புதுச்சேரி: ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மனைவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ரெட்டியார்பாளையம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் தெய்வநாயகம், 60; ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கீதா, 50. இவர் ஏற்கனவே மனநிலை பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த 2014ம் ஆண்டு எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்து காப்பாற்றினர். கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்த அவர், நேற்று வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ