மேலும் செய்திகள்
ஐ.டி.ஐ., படிப்பு: நேரடி சேர்க்கை
23-Aug-2024
புதுச்சேரி : புதுச்சேரி அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்வதற்கான கால அவகாசம் செப்., 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு ஆண்கள் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை பயிற்சி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் ஐ.டி.ஐ.,க்கள் மூலம் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் சேர்வதற்கான கால அவகாசம் செப்., 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தவறியவர்கள், எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் உரிய மதிப்பெண் சான்றிதழ், இறுதியாக கல்வி பயின்ற கல்வி நிலையத்தில் இருந்து பெறப்பட்ட மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடியிருப்ப சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேரடியாக அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை சந்தித்து உடனடியாக சேரலாம். வம்பாகீரப்பாளையம், வில்லியனுார், பாகூர் அரசு, நெட்டப்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி மையங்களில் காலியாக உள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கான நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.சேர விரும்பம் மாணவர்கள் அந்தந்த தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரில் சந்தித்து சேரலாம். முதலில் வரும் மாணவர்ளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இந்த உடனடி சேர்க்கை இந்த மாதம் 30ம் தேதிவரை நடைபெறும். தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை, மதிய உணவு மற்றும் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
23-Aug-2024