உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண் தாதாவின் கூட்டாளி ஊருக்குள் நுழைய தடை

பெண் தாதாவின் கூட்டாளி ஊருக்குள் நுழைய தடை

காரைக்கால்: காரைக்கால், திருபட்டினத்தை சேர்ந்த ராமு கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்கு பழியாக அவரது இரண்டாவது மனைவியான தாதா எழிலரசி, முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் உள்ளிட்டோரை கூலிப்படை வைத்து கொலை செய்தார்.எழிலரசி ஊரில் இல்லாத நிலையில், அவரது கூட்டாளி விக்ரமை காரைக்காலில் நுழைய தடை விதிக்க மாவட்ட சார்பு நீதிபதிக்கு திருபட்டினம் இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன் பால் பரிந்துரை செய்தார். அதனையேற்று நீதிபதி ஜான்சன், விக்ரம் 2 மாதங்கள் காரைக்காலில் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ