மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
1 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி சாரம் லெனின் வீதி சந்திப்பில் உள்ள மரக்கடையை மர்ம நபர்கள் சூறையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இடத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுச்சேரி சாரம் காமராஜர் சாலை, லெனின் வீதி சந்திப்பில், முருகன் மலர்கொடி தம்பதி கடந்த பல ஆண்டுகளாக கீற்று, மரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். அந்த இடத்தின் உரிமையாளருக்கும், கடை நடத்தும் முருகனுக்கு இடையே இடம் தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு, மர கடைக்குள் வந்த 10க்கும் மேற்பட்டோர் முருகனின் மர கடையை அடித்து நொறுக்கினர். தடுக்க வந்த முருகனுக்கும் அடி விழுந்தது. கடையை சூறையாடிய கும்பல் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளுடன் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகையில், மரம் விற்பனை கடையை, இதே பகுதியைச் சேர்ந்த தணிகைவேல் (எ) குமார், ஏ.பி.எம்., கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் விநாயகமூர்த்தி ஆகியோர், இடத்தை காலி செய்ய மிரட்டியதுடன் ரவுடிகளை அனுப்பி தாக்கி சூறையாடினர். போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் கும்பல் குறித்து உருளையன்பேட்டையில் புகார் அளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago