உள்ளூர் செய்திகள்

மீனவர் தற்கொலை

காரைக்கால் : காரைக்காலில் மீனவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காரைக்கால்மேடு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேசன், 48; மீனவர். இவரது மனைவி சுபா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். கார்த்திகேசவன் கடந்த சில நாட்களாக சரியான துாக்கமின்றி சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் துாக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அனைவரும் துாங்க சென்றனர்.துாக்கமின்றி வேதனையில் இருந்த கார்த்திகேசன் வீட்டின் பின்பக்கம் உள்ள இரும்பு கம்பியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை