உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ம.க., ஆண்டு விழா புதுச்சேரியில் கொடியேற்றம்

பா.ம.க., ஆண்டு விழா புதுச்சேரியில் கொடியேற்றம்

புதுச்சேரி, : பா.ம.க., வின் 36ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, பல்வேறு இடங்களில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.பா.ம.க., வின் 36ம் ஆண்டு துவக்க விழா, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி கொண்டாடினர். கவுண்டம் பாளையத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகம், லாஸ்பேட்டை, கொட்டுப் பாளையம் உள்ளிட்ட இடங் களில் கொடியேற்றினர்.கவுண்டம்பாளையம் கட்சி தலைமை அலுவல கத்தில், நடந்த நிகழ்ச்சியில், மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். வன்னியர் சங்க தலைவர் ஜெயகுமார், துணை அமைப்பாளர் வடிவேல், ஆலோசகர் ஜெயபாலன் செயலாளர் திருமலை, பொருளாளர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த நிகழ்ச்சியில், நகர தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில இளைஞர் சங்க செயலாளர்கள் சேதுபதி, பிரதீப், ராஜேஸ்வரி உட்பட நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை