உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மலர் அலங்காரம் பயிற்சி முகாம்

மலர் அலங்காரம் பயிற்சி முகாம்

திருக்கனுார்: திருக்கனுார் உழவர் உதவியகம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் வேளாண் மகளிர்களுக்கான மலர் அலங்காரம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. சோம்பட்டு கிராமத்தில் நடந்த முகாமிற்கு, வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். இதில், மலர் அலங்காரம் செய்முறை மற்றும் பூச்செடிகள் வளர்ப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில், உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், தங்கதுரை, சோம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த வேளாண் மகளிர் குழுவினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை