உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை

இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை

: புதுச்சேரி : விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ.,மனோகர் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மதில் சுவர் விபத்தில் இறந்த ஓவ்வொருவரின் குடும்பத்திற்கும் 25 லட்சம் ரூபாயும் , காயமுற்றவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்கவேண்டும்.இந்த நிதியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இருந்து ஒதுக்கி வழங்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியமாக இருந்த சம்பந்தப்பட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இதுபோன்ற ஆபத்தான அரசு பணிகள் நடைபெறும் இடத்தை புதுச்சேரி அரசின் ஸ்மார்ட்சிட்டி நிர்வாக அதிகாரிகள் முன்பே ஆய்வு செய்து தொழிலாளர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கு தகுந்த உயிர் பாதுகாப்பு அளிக்கவேண்டும்.அப்பகுதியில் உள்ள கட்டடங்களின் ஸ்திரத்தன்மையையும் ஆய்வு செய்த பிறகே அனைத்து வேலைகளையும் ஆரம்பித்திருந்திருக்கவேண்டும்.இதை அதிகாரிகள் செய்யத்தவறிவிட்டார்கள் இதுவே விபத்து ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது புதுச்சேரி அரசு அதிகாரிகளின் கடமை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ