உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 5 பேரிடம் ரூ.24.52 லட்சம் மோசடி 

5 பேரிடம் ரூ.24.52 லட்சம் மோசடி 

புதுச்சேரி: புதுச்சேரியில், 5 பேரிடம், 24.52 லட்சம் ரூபாயை ஆன்லைனில் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரியை சேர்ந்தவர் ராம சுப்ரமணியன். இவரை, மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைத்தார். அந்த குரூப்பில், ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது குறித்து மர்ம நபர் பேசினார்.இதை நம்பிய ராம சுப்ரமணியன் அவர் அனுப்பிய 'லிங்க்'கில், 21.75 லட்சம் ரூபாயை முதலீடு செய்து, ஏமாந்தார்.இதேபோல முத்தியால்பேட்டை பாரதி, ஆன்லைனில், 1.33 லட்சத்தை முதலீடு செய்து, ஏமாந்தார். காரைக்காலை சேர்ந்த கோபிநாத்தை, தொடர்பு கொண்ட மர்ம நபர், கிரெடிட் கார்டை,முழுமையாக ரத்து செய்ய,விவரங்களை கேட்டார். அவர்விவரங்களை வழங்கிய உடன்,அவரது கிரெடிட் கார்டில் இருந்து, 45 ஆயிரம் எடுக்கப்பட்டது.அரியாங்குப்பத்தை சேர்ந்த சுமித்ரா குறைந்த வட்டியில் லோன் வாங்க, ரூ.28 ஆயிரம் அனுப்பியும், முத்தியால்பேட்டையை சேர்ந்த சுமித்ரா, ரூ.71 ஆயிரம் ரூபாய் அனுப்பியும் ஏமாந்தனர். ஐந்து பேரும் மொத்தம் 24.52 லட்சத்தை, மோசடி கும்பலிடம் ஏமாந்தனர். அவர்கள் அளித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்