உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச  மருத்துவ முகாம் 

இலவச  மருத்துவ முகாம் 

புதுச்சேரி, : ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க., மருத்துவ அணி சார்பில், மகாத்மா காந்தி மருத்துவமனை மற்றும் ஜோதி கண் மருத்துவமனை இணைந்து, இலவச பொது மருத்துவ முகாமை வாணரப்பேட்டை, கஸ்துாரி மகாலில் நடத்தின. மருத்துவர் அணி தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அன்பழகன் முகாமை துவக்கி வைத்தார். பொது மருத்துவம், குழந்தைகள் நல சிகிச்சை, கண் மருத்துவம், தோல் சிகிச்சை, காது மூக்கு தொண்டை, பல் மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு உள்ளிட்டவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநில இணை செயலாளர் வீரம்மாள், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, கலை பிரிவு துணை தலைவர் ஜெயராமன், மகளிர் அணி பொருளாளர் செந்திலரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை