உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கெங்கையம்மனுக்கு சாகை வார்த்தல்

கெங்கையம்மனுக்கு சாகை வார்த்தல்

திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு காலணியில் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சாகை வார்த்தல் விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் நடந்தது.இரவு 8:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. அம்மனுக்கு கும்பம் படையல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.முக்கிய நிகழ்வாக, வரும் 9ம் தேதி காலை 11:00 மணிக்கு முத்து மாரி யம்மன் கோவிலில் சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ