உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஆட்ட நாயகனாக கவுதம் தேர்வு

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஆட்ட நாயகனாக கவுதம் தேர்வு

அரியாங்குப்பம் : தவளக்குப்பத்தில் நடந்து வரும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நாயகனாக ஸ்மர்ஷ்சர்ஸ் அணி, கவுதம் தேர்வு செய்யப்பட்டார். தவளக்குப்பம் பிரீமியர் லீக் கிரிக்கெட் அணி சார்பில், அபிேஷகப்பாக்கம் சாலை தனியார் டீத்துாள் கம்பெனி அருகே உள்ள திடலில் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில், தவளக்குப்பம், பூரணாங்குப்பம் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். கடந்த 1ம் தேதி காலையில் நடந்த போட்டியில், ஸ்பாட்டன் அணி, கிளாடியேட்டர் ஆகிய இரு அணிகள் மோதின. இதில், 28 ரன்கள் வித்தியாசத்தில் கிளாடியேட்டர் அணி வெற்றி பெற்றது. மதியம் நடந்த போட்டியில், கிங்ஸ் அணி, ஸ்மர்ஷ்சர்ஸ் அணியும் மோதின. இதில், 2 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்மர்ஷ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.மறுநாள் 2ம் தேதி, காலையில் நடந்த போட்டியில், கிளாடியேட்டர் அணி, பேட்டரி ஆர்ட்ஸ் அணியும் மோதின. இதில், 67 ரன் வித்தியாசத்தில் கிளாடியேட்டர் அணி வெற்றி பெற்றது. அன்று மதியம் நடந்த போட்டியில், கிங்ஸ் அணி, ஸ்பாட்டன்ஸ் அணியும் மோதின. இதில், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்பாட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.கடந்த வாரம் நடந்த போட்டியில், சிறந்த ஆட்டநாயகனாக, ஸ்மர்ஷ்சர்ஸ் அணியின் வீரர் கவுதம் தேர்வு செய்யப்பட்டார். பிரீமியர் கிரிக்கெட் லீக் போட்டி நடத்தி வரும், ஒருங்கிணைப்பாளர் உதயா அவரை வாழ்த்தி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி