உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குறைந்த மாணவர் கொண்ட அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில் கோட்டை

குறைந்த மாணவர் கொண்ட அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில் கோட்டை

புதுச்சேரி : பிளஸ் 2 தேர்வு முடிவில், குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகள் கூட முழு தேர்ச்சியை பெற முடியாமல் கோட்டை விட்டுள்ளன.புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் 55 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இருந்தாலும், ஒரிரு பள்ளிகளில் மட்டுமே 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பல பள்ளிகளில் 30க்கும் குறைவான மாணவர்களை மட்டுமே வைத்து கொண்டு மேல்நிலை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்படி குறைவான மாணவர்கள் தேர்வு அனுப்பியும் பல அரசு பள்ளிகள் முழு தேர்ச்சி சதவீதத்தை எட்டவில்லை.உழவர்கரை அரசு பள்ளியில் 23 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 17 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். கரிக்கலாம்பாக்கம் பள்ளியில் 27 பேரில் 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கூடப்பாக்கம் அரசு பள்ளியில் 25 பேரில் 19 பேரும், சுல்தான்பேட்டை பள்ளியில் 16 பேரில் 14 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முத்தியால்பேட்டை காமராஜர் பள்ளியில் தேர்வு எழுதிய 20 மாணவர்களில், 18 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அன்சாரி துரைசாமி பள்ளியில் 28 பேரில் 26 மாணவர்களும், ஆலங்குப்பம் பள்ளியில் 28 பேரில் 26 பேர், குருசுக்குப்பம் என்.கே.சி. பள்ளியில் தேர்வு எழுதிய 35 பேரில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை