மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
4 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பி.ஆர்.டி.சி. பஸ்கள் அதிகம் இயக்கிட போக்குவரத்து துறை அதிகாரிகளை, கவர்னர் அறிவுறுத்தினார்.புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகமான பி.ஆர்.டி.சி. மூலம் இ-பஸ்கள் இயக்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.கவர்னர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா, ஆணையர் சிவக்குமார், வட்டார போக்குவரத்து அதிகாரி சீதாராமராஜி கலந்து கொண்டனர்.கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன் உடனிருந்தார்.பி.ஆர்.டி.சி.யின் செயல்பாடுகள், பஸ்களின் எண்ணிக்கை, இயக்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ள பஸ்களின் நிலை, புதிதாக வாங்கிய பஸ்கள் இயக்கும் முறை, ஊழியர்களின் எண்ணிக்கை விபரங்களை அதிகாரிகள் விளக்கினர்.புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பி.ஆர்.டி.சி. பஸ்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த, அந்தந்த மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாதகமான வழித்தட உரிமை விகிதாச்சாரத்தை அதிகரித்திட வேண்டும்.குறிப்பாக, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், திருச்செந்துார் போன்ற மக்கள் அதிகம் பயணிக்க விரும்பும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக இ-பஸ்கள் அதிகம் இயக்கவும், புதுச்சேரியில் சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்படுவதை விளம்பரப்படுத்தவும், சுற்றுலா தலங்களுக்கு தற்போது இயக்கப்படும் பஸ்கள் எண்ணிக்கையை அதிகரித்திட அதிகாரிகளுக்கு, கவர்னர் அறிவுறுத்தினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago