உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீ விபத்தில் இறந்தவர்களுக்கு கவர்னர் ராதாகிருஷ்ணன் இரங்கல்

தீ விபத்தில் இறந்தவர்களுக்கு கவர்னர் ராதாகிருஷ்ணன் இரங்கல்

புதுச்சேரி: குஜராத் மற்றும் டில்லியில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, இரங்கலை கவர்னர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: குஜராத், ராஜ்கோட் விளையாட்டு திடலில், ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியும், டில்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர் என்ற செய்தியும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த இரண்டு துயர சம்பவங்களும் மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கின்றன. இந்த தீ விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு புதுச்சேரி மக்கள் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான, துயரமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்