உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கவர்னர் டில்லி பயணம்

கவர்னர் டில்லி பயணம்

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று டில்லி புறப்பட்டு சென்றார்.புதுச்சேரி புதிய கவர்னராக கைலாஷ்நாதன் 7ம் தேதி பதவியேற்று கொண்டார். புதுச்சேரியில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம், அரசு நிர்வாகம், கடந்த கால அரசியல் செயல்பாடுகளை கவர்னர் கைலாஷ்நாதன் கேட்டறிந்தார். இந்நிலையில், கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று காலை சென்னை சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் டில்லி சென்றார். இன்று 19ம் தேதி பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கைலாஷ்நாதன் கவர்னராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக டில்லி செல்வது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ