மேலும் செய்திகள்
சூறாவளி காற்றுடன் மழை கம்பிகள் அறுந்து மின்தடை
31-Aug-2024
பாகூர் : பாகூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால், மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாகூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், அவ்வப்போது லேசான மழையும் பெய்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், இடி, மின்னல் பலத்த கற்றுடன் கன மழை பெய்தது.பல இடங்களில் மின்சார கம்பிகளின் மீது மரங்கள் விழுந்ததால், மின்சாரம் தடைபட்டது. சேலியமேடு ஆஞ்சநேயர் கோவில் வீதியில் மரம் விழுந்ததால், இரும்பு மின் கம்பம் வளைந்து சேதமாகி மின்சாரம் கேபிள்கள் பழுதானது. நுாலகம் அருகே உள்ள ஹைமாஸ் விளக்கு கம்பம் அடியோடு பெயர்ந்து, அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. மின் ஊழியர்கள் பழுதினை சரி செய்து, மின்சாரம் வழங்கினர்.
31-Aug-2024