| ADDED : ஜூலை 22, 2024 01:42 AM
புதுச்சேரி : கோவில்களை இந்து சமய சான்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இந்து முன்னணி சார்பில் கோவில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றாத இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்துஆர்ப்பாட்டம் நடந்தது. சுதேசி மில் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் நாகராஜ் வரவேற்றார்.மாநில தலைவர் சனில்குமார் கண்டன உரையாற்றினார். போராட்டத்தின்போது கோவில் சொத்துகளை மீட்க வேண்டும். கோவில் உள்ள இடங்களில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும். கோவில் சொத்துகளை பொதுமக்கள் போராடித் தான் மீட்டு வருகின்றனர்.அப்புறம் எதற்கு இந்து சமய அறநிலை துறை உள்ளது. புதுச்சேரி இந்து சமய அறநிலைத் துறை கோவிலை விட்டு வெளியேற வேண்டும். கோவில்களை இந்து சமய சான்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும். கண்காணிப்பு பணியை மட்டும் அரசு செய்ய செய்ய என வலியுறுத்தப்பட்டது. இந்து சமய நிறுவனத்தின் செயல்பாடுகளை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.நிர்வாகிகள் சக்திவேல், செந்தில்முருகன், மணிவீரப்பன், மணிவண்ணன், தியாகராஜன், சிவமுத்து, நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.