உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்காலில் இந்து முன்னணி பேரணி

காரைக்காலில் இந்து முன்னணி பேரணி

காரைக்கால்: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சார்பில் பேரணி நடந்தது.பேரணிக்கு நகரத்தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக மாவட்ட சீனியர் எஸ்.பி., அலுவலகத்தில் சென்று மனு அளித்தனர். பேரணியில் வங்கதேசத்தில் இந்துகள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், சிறுபான்மையினராக வாழும் அவர்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களையும்,இந்துக்கோவில்கள் இடிக்கப்படுவதை மத்திய அரசு தடுக்க வலியுறுத்தினர். பேரணியில் பா.ஜ., முன்னாள் மாவட்டத் தலைவர் துரைசேனாதிபதி, சிவசுப்ரமணியன்,அருள்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி